மீண்டும் களமிறங்கும் ரணில் - சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்
சமகாலத்தில் அநுர அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைத்து வருவதாக எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன.
விரைவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கவுள்ள நிலையில், விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, மீண்டும் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.
இதய அறுவை சிகிச்சையை தொடர்ந்து ஓய்வெடுத்து வந்த நிலையில், அவர் மீண்டும் தனது அரசியல் நடவடிக்கைகளைத் ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகிறது.
அரசியல் நடவடிக்கை
அதற்கமைய, அவர் கடந்த 8ஆம் திகதி முதல் கொழும்பு மல் வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் தனது பணிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் சிங்கப்பூரில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ரணில் ஏப்ரல் 9ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பினார்.
அதன் பின்னர் ஒரு மாதத்திற்கும் மேலாக வைத்தியர்களின் ஆலோசனையின் பேரில் அவர் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஓய்வெடுத்து வந்தார்.
இரகசிய சந்திப்பு
இவ்வாறான நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்க இரகசிய சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் விரைவில் நாடாளுமன்றத்திற்குள் உறுப்பினராக உள்நுழைய ரணில் தயாராகி வருவருதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri