யாழில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவரே நேற்றையதினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் கடந்த நான்காம் திகதி மதுபோதையில் மருத்துவ மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகள்
பின்னர் அவரது மனைவி ஐந்தாம் திகதி அதிகாலை அவரை எழுப்பியுள்ளார். அவர் மயக்கம் அடைந்து காணப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தொடர்ந்து மயக்க நிலையிலேயே காணப்பட்ட குறித்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மருத்துவ வில்லைகளை அளவுக்கதிகமாக உட்கொண்டதால் மரணம் சம்பாதித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர் Cineulagam

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
