யாழில் இடம்பெற்ற மின்சார கட்டண திருத்தம் தொடர்பான விசேட கூட்டம்
இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை இன்று (27) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏற்பாடில் கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமான குறித்த கலந்துரையாடல் ஜூன் 3 ஆம் திகதி வரை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்திருந்தார்.
கட்டண அதிகரிப்பால் ஏற்படும் தாக்கம்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தவிசாளர் கே.பி.எல் சந்திரலால், பிரதிப் பணிபளர் நாயகம் நிலந்த சப்புமானகே, இலங்கை பொதுபயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க உள்ளிட்ட பிரதானிகள் பிரசன்னத்துடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அதன்படி இன்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கட்டண அதிகரிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து பல்துறைசார் தரப்பின் பிரதிநிதிகள் வலியுறுத்தியிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam
