எல்லை தாண்டிய இலங்கை மீனவர்களுக்கு சென்னை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் இலங்கை மீனவர்கள் இருவரையும் எதிர்வரும் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
21ஆம் திகதி இரவு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் தொழிலுக்கு சென்றபோது எல்லை தாண்டி சென்றுள்ளனர்.
இதனை அவதானித்த இந்திய கடற்படையினர் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு அவர்களை நாகப்பட்டினம் கடல் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், மீனவர்களை இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை எதிர்வரும் 1ஆம் திகதி வரை சிறையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து மீனவர்கள் இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்...
எல்லை தாண்டிய இலங்கை மீனவர்களை கைது செய்த இந்திய கடற்படையினர்

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 21 மணி நேரம் முன்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா... புதிய ஜோடி, புரொமோ இதோ Cineulagam
