எல்லை தாண்டிய இலங்கை மீனவர்களை கைது செய்த இந்திய கடற்படையினர்
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் இருவரை இந்தியக் கடற்படையினர் இன்றிரவு கைது செய்துள்ளனர்.
குறித்த மீனவர்கள் இருவரையும் இந்தியக் கடற்படையினர் கைது செய்து நாகபட்டினம் துறைமுகம் நோக்கி அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் இருவரும் இலங்கையின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. அவர்கள் இருவரும் கரைக்கு அழைத்து செல்லப்பட்ட பின்னர் அது குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கை மீனவர்கள் இருவரை இந்தியக் கடற்படையினர் இன்றிரவு கைது செய்ததை இலங்கைக் கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் எல்லை தாண்டி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் மூவரை இலங்கைக் கடற்படையினர் மடக்கிப் பிடிக்க முயன்றபோது கடற்படையினரின் படகு, இந்திய மீனவர்களின் விசைப்படகுடன் மோதியதில் மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்திருந்தார்.
ஏனைய இரு மீனவர்களையும் இலங்கைக்
கடற்படையினர் கைது செய்திருந்தனர்.
இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எல்லைதாண்டி
மீன்பிடித்தார்கள் என்று குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் இருவரை இந்தியக்
கடற்படையினர் இன்றிரவு கைது செய்துள்ளனர்.
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam