உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததும் வழங்கப்படவுள்ள நியமனங்கள்

Ministry of Education A D Susil Premajayantha Sri Lankan Schools
By Benat Jan 10, 2024 12:27 PM GMT
Report

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை நிறைவு பெற்றதும் பல நியமனங்களை வழங்குவதற்கான நேர்முக பரீட்சை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலை : கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலை : கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

ஆசிரியர் வெற்றிடங்கள்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஆசிரியர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதை ஏற்றுக்கொள்கின்றோம். ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளமை விடுமுறையில் சென்றுள்ளமை மற்றும் ஆசிரியர்கள் பதவி விலகியுள்ளமை உள்ளிட்ட காரணங்களால் ஆசிரியர் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் அதிகளவு ஆசிரியர் வெற்றிடங்கள் மாகாண மட்ட பாடசாலைகளிலேயே காணப்படுகின்றன.

உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததும் வழங்கப்படவுள்ள நியமனங்கள் | Education Minister New Announcement

அந்த வகையில் மாகாண மட்ட பாடசாலைகளில் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள, ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். 60 வயது நிறைவடைந்துள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் 6018பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.

அத்துடன் அமைச்சரவை தீர்மானத்தின்படி பதவியில் இருந்து விலகியமை செய்தமை, விடுமுறையில் சென்றுள்ளமை மற்றும் ஓய்வு பெற்றுள்ளமை காரணமாக மாகாண மட்டத்தில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் அனைத்து மாகாணங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு இவ்வாறு இணைத்துக்கொள்ளப்படுவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

அந்த வகையில் மேல் மாகாணத்திற்கு 5000 பட்டதாரி ஆசிரியர்களும் தென் மாகாணத்திற்கு 1028, மத்திய மாகாணத்திற்கு 1067, வடமத்திய மாகாணத்திற்கு 1408, வடமேல் மாகாணத்திற்கு 665, ஊவா மாகாணத்திற்கு 590, சப்ரகமுவ மாகாணத்திற்கு 877 என மொத்தமாக 10,635 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததும் வழங்கப்படவுள்ள நியமனங்கள் | Education Minister New Announcement

அது தொடர்பில் அறிவிப்பு செய்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு பரீட்சை நடத்தப்பட்டு நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு நியமனம் வழங்குவதற்கு முற்படுகையில் நீதிமன்றத்தில் அதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் இரண்டு வழக்குகள் தொடர்பில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் 10 ஆயிரத்து 635 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கு மேலதிகமாக விஞ்ஞானம், கணிதம், மொழி, சர்வதேச மொழி, தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்காக 5450 பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்தது. அவற்றில் 1700 பட்டதாரிகள் தேசிய பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை நிறைவு பெற்றதும் இந்த நியமனங்களை வழங்குவதற்கான நேர்முக பரீட்சை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை 21,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக அது தடைப்பட்டது.

அது தொடர்பான வழக்கு தீர்ப்பு விரைவில் கிடைத்ததும் அவர்களையும் ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் வங்கிகளில் வட்டி கிடைக்கும் வைப்பாளரின் நிலை! சிரேஷ்ட விரிவுரையாளரின் தகவல்

இலங்கையில் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் வங்கிகளில் வட்டி கிடைக்கும் வைப்பாளரின் நிலை! சிரேஷ்ட விரிவுரையாளரின் தகவல்

கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை செலவில் அமைச்சர்களுக்கு விருந்து

கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை செலவில் அமைச்சர்களுக்கு விருந்து

நாட்டில் பாரிய அளவில் அதிகரித்துள்ள வறுமை நிலை : நாடாளுமன்றில் அறிவிப்பு

நாட்டில் பாரிய அளவில் அதிகரித்துள்ள வறுமை நிலை : நாடாளுமன்றில் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US