நாட்டில் பாரிய அளவில் அதிகரித்துள்ள வறுமை நிலை : நாடாளுமன்றில் அறிவிப்பு
நாட்டில் வறுமை நிலை பாரிய அளவில் அதிகரித்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளின் உறுப்பினர் பாலகுமாரன் உள்ளிட்ட போராளிகளுக்கு நடந்தது என்ன: மன்றில் சிறீதரன் சீற்றம்
வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அண்மைக்கால மதிப்பீட்டு தொடர்பில் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
அதன் அறிக்கையின் பிரகாரம் நாட்டிவ் 60 வீதத்துக்கும் அதிகமானவர்களின் வருமானம் குறைந்துள்ளதுடன் 92வீதமானவர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது.
அதேபோன்று 37வீதமாக இருந்த வறுமை நிலை இந்த மாத இறுதியாகும்போது அது 40 வீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் நாங்கள் கோட் அணிந்து குளிரூட்டப்பட்ட அறையின் வாழ்க்கைச்செலவின் தன்மையும் இலட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கைச்செலவின் தன்மைக்குமிடையில் இருந்துவரும் வித்தியாசம் விசாலமானது. வறுமை நிலை பாரியளவில் அதிகரித்து வருகிறது.
அதனால் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மதிப்பீட்டு அறிக்கையை முழுமையாக சபைக்கு சமர்ப்பித்து அதுதொடர்பில் விவாதத்துக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அதற்காக ஆளும் எதிர்க்கட்சி அனைவரும் அதற்காக ஆதரவளிக்க முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் வங்கிகளில் வட்டி கிடைக்கும் வைப்பாளரின் நிலை! சிரேஷ்ட விரிவுரையாளரின் தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |