கொங்கோவில் சுகாதார வலயங்களுக்கு பரவிய எபோலா வைரஸ் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் “புண்டிபுக்யோ” வகை எபோலா வைரஸ் தொற்று மேலும் இரு புதிய சுகாதார வலயங்களுக்குப் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அந்த நாட்டின் ஏழு மாகாணங்களிலுள்ள 63 சுகாதார வலயங்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன.
செப்டெம்பர் 23ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி, கொங்கோவில் 7,890 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 3,799 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
இந்த நாட்டில் நிலவும் உள்நாட்டு மோதல்கள் மற்றும் மக்கள் இடம்பெயர்வு காரணமாக, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதிலும் சுகாதாரப் பணியாளர்கள் குறித்த பகுதிகளுக்குச் செல்வதிலும் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இந்த பண்டிபுக்யோ எபோலா வைரஸ் வகைக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது தடுப்பு சிகிச்சைகளோ இல்லாத நிலைமை நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதற்கான தடுப்பூசிப் பரிசோதனைகளை விரைவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அதேவேளை, எதிர்கால உலகளாவிய சுகாதார அவசரநிலைகளை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், உலக சுகாதார நிறுவனத்தின் பெருந்தொற்று உடன்படிக்கை தொடர்பில் பரப்பப்படும் பொய்ப் பிரசாரங்களை மக்கள் நம்பவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri