கொங்கோவில் மீண்டும் வேகமாகப் பரவும் எபோலா நோய்
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப்பகுதியிலுள்ள வடக்கு கிவு மாகாணத்தில் எபோலா வைரஸ் தொற்று மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
நாட்டின் ஏனைய பகுதிகளில் தொற்றின் வேகம் சற்றுத் தணிந்துள்ள போதிலும், சுமார் இரண்டு மில்லியன் மக்கள் வாழும் புடெம்போ நகரில் நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது.
புதிதாக இரு சிகிச்சை நிலையங்கள்
அங்குள்ள கிடாடும்பா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட கட்டில்கள் அனைத்தும் நிரம்பியுள்ளதால், புதிதாக வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த நகரில் புதிதாக இரு சிகிச்சை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத் தரவுகளின்படி நாட்டில் இதுவரை 7,820 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 3,779 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு கிவு மாகாணத்தில் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். இது தேசிய சராசரியான 48 சதவீதத்தை விடவும் மிக அதிகமாகும்.
மக்கள் மத்தியில் நோய் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதுடன், மருத்துவமனைகள் மீதும் சுகாதாரப் பணியாளர்கள் மீதும் கடுமையான அவநம்பிக்கை நிலவுகின்றது.
உயிர்த்த ஞாயிறு வழக்குத் தீர்ப்பு : மறைக்கப்பட்ட பல சர்ச்சைக்குரிய தகவல்களை அம்பலப்படுத்தும் புலனாய்வாளர்....