உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மூன்று நீதிபதிகளை கொண்ட விசாரணைக் குழு கடந்த வாரம் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் பங்குத்தந்தையிடமிருந்து உணர்ச்சிவசப்பட்ட சாட்சியத்தை பதிவுசெய்து கொண்டது.
இதன் போது மதகுரு குருகுலசூரிய அன்டன் ஜூட் ராஜ் பெர்னாண்டோ தாக்குதலுக்குப் பின் உடலங்களைப் பார்த்ததை விபரித்தபோது உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.
தொடரவுள்ள சாட்சியம்
சம்பவ தினத்தில் சகோதரர் ஜோசப் மரியரத்தினம் காலை ஆராதனையை நடத்திக்கொண்டிருந்தார்.
இந்தநிலையில் காலை 8.45 மணியளவில் ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டது, அந்த நேரத்தில் தாம் தனது அலுவலகத்தில் இருந்து சிசிடிவியில் அடியார்களை பார்த்துக் கொண்டிருந்ததாக வணக்கத்துக்குரிய தந்தை பெர்னாண்டோ சாட்சியமளித்துள்ளார்.
இதன்போது வெடிச்சத்தத்தைக் கேட்டதும் வெளியே வந்த தம்மால், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்கள் சிதறிக் கிடக்கும் மற்றும் பலத்த காயமடைந்த மக்களின் காட்சியை காணமுடிந்தது என்று சாட்சி குறிப்பிட்டார்.
மேலும், வணக்கத்துக்குரிய தந்தை பெர்னாண்டோவின் சாட்சியம் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி தொடரவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 6 மணி நேரம் முன்

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
