தேசபந்து தென்னக்கோன் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புதிய இணைப்பு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
நேற்றையதினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதிரடி கைது..
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமாக தாக்குதல் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்றையதினம் குற்றப்புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இதேவேளை, குறித்த வழக்கில் தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் நோக்குடன் முன்பிணைக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam
