குவியும் தொண்டர்கள்! மதுரையில் த.வெ.கவின் இரண்டாவது மாநில மாநாடு
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு இன்று(21) மாலை நடைபெறுகிறது.
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் குறித்த மாநாடு இடம்பெறுகின்றது.
தமிழக வெற்றிக் கழகம்
இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்தன.
இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாநாட்டு அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தன.
மொத்தமுள்ள 500 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட மைதானத்தில், 250 ஏக்கர் மாநாடு நடைபெறும் இடமாகவும், மீதமிருக்கும் 300 ஏக்கர் நிலம் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது மாநாடு
மேலும் மாநாடு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொண்டர்கள் அமர பச்சை கம்பளம் விரித்து அதில் 2 லட்சம் சேர்களும், அதி முக்கியஸ்தர்கள் அமர சிவப்பு கம்பளம் விரித்து அதில் 300 கதிரைகளும் போடப்பட்டுள்ளன.
உயர்கோபுர மின்விளக்குகள், போக்கஸ் லைட்டுகள் என மாநாட்டு திடல் காணப்படுவமாக செய்திகள் வெளியாகியுள்ளது. தவெக மாநாடு நடைபெறும் பகுதியில் கட்சி தலைவர் விஜய் நடந்து செல்லும் பகுதி தடுப்புகளில் கிரீஸ் தடவப்படுகின்றன.
அவர் செல்லும் போது தடுப்புகளில் ஏறி ரசிகர்கள் அத்துமீறுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
த.வெ.க.வின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் மதுரையை அடுத்த பாரபத்தி பகுதி திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இடமாகும்.
தொண்டர்கள் கூட்டம்
அந்த பகுதியில் திரண்ட தொண்டர்கள் கூட்டம் மற்றும் வாகன போக்குவரத்து மாற்றத்தால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதால் எலியார்பத்தி, வளையங்குளம், காரியாபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
மதுரையில் இன்று நடைபெறும் த.வெ.க. 2ஆவது மாநில மாநாட்டில், விக்கிரவாண்டியை போன்று 100 அடி உயரத்தில் பிரமாண்ட கொடி கம்பம் தயாராகியுள்ளது. இந்த கொடிக்கம்பம் மாநாட்டு திடலில் நிரந்தரமாக இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நேற்று மாலை இந்த இரும்பினால் ஆன கொடிக்கம்பம் நிறுவும் பணி நடைபெற்றது. பீடத்தின் மீது கொடிக்கம்பத்தை வைத்தபோது எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்தது.
தலைவர் விஜய்
இதில் தெய்வாதீனமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மாறாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மட்டும் சேதமடைந்தது.
மீண்டும் அதே இடத்தில் 100 அடி உயர கொடிக்கம்பத்தை நிறுவினால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநாட்டு மேடையின் முன்பாக 40 அடி உயரத்தில் மற்றொரு கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. இதனை இன்று த.வெ.க. தலைவர் விஜய் ஏற்றி வைக்கவுள்ளார்.





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam
