ரணிலின் தீர்மானங்களை சரியென்று நிரூபிக்கும் அநுர தரப்பு..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளையே இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தமது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை இந்த அரசாங்கமும் முன்னெடுத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
ரணிலின் சரியான தீர்மானங்கள்..
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலமொன்றை வழங்கியதன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் தலைமையிலான அரசாங்கத்தை கடும் விமர்சனத்திற்கு உட்படுத்திய இந்த அரசாங்கம் தற்பொழுது அதே திட்டங்களை எம்மை விடவும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் நபர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படுவது நல்லது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணைகளின் மூலம் உண்மை யதார்த்தங்களை வெளிக்கொணர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு உள்ளிட்ட போலி குற்றச்சாட்டுக்களுக்கு மக்கள் முன்னிலையில் உண்மைகளை அம்பலப்படுத்த இந்த விசாரணைகள் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்ததன் மூலம் என்ன நேர்ந்துள்ளது என்பதனை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளதாகவும் அவர்கள் புத்திசாலிகள் எனவும் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கடந்த அரசாங்கத்தின் தீர்மானங்கள் சரியானவை என்பதை இந்த அரசாங்கம் தொடர்ந்தும் நிரூபித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam