தமிழக வெற்றிக் கழகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள விஜய்
தமிழக வெற்றிக்கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறும் என்று கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, இந்தியா- விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடைபெற்றது.
2ஆவது மாநில மாநாடு
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு மதுரையில் வருகிற 25ஆம் திகதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
பொலிஸ் தரப்பில், மாநாடு நடைபெறும் 25ஆம் திகதியை தொடர்ந்து 27ஆம் திகதி விநாயகர் சதுர்த்தி வர இருப்பதாகவும், அதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டியதிருப்பதால், மாநாடு நடைபெறும் திகதியை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், வருகிற 2ஆவது மாநில மாநாடு 21ஆம் திகதி நடைபெறும் என்று கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
— TVK Vijay (@TVKVijayHQ) August 5, 2025
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் திருவிழா




