விஜயின் மாநாடு.. 100 அடி கம்பம் விழுந்ததால் பரபரப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாட்டின் ஏற்பாடுகளின் போது 100 அடி உயர கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த கம்பம் ஒரு காரின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கார் விபத்து..
அதேவேளை, காரிற்குள் யாரும் இல்லை என்பதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தவெக மாநாடு - திடீரென கீழே விழுந்த கொடிக்கம்பம்
— PttvOnlinenews (@PttvNewsX) August 20, 2025
கிரேன் மூலம் கொடிக்கம்பத்தை நிறுவ முற்பட்டபோது கார் மீது விழுந்தது- த.வெ.க.வினர் அதிர்ச்சி#Madurai | #TVKMaanadu | #TVKVijay | #TVK pic.twitter.com/V74xUCRBAn
மேலும், குறித்த கம்பம் மிக மோசமாக சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை (21) இடம்பெறவுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்




