சுங்கத்தின் டிரிலியன் கணக்கான இலாபம்! இரகசியங்களை அம்பலப்படுத்திய முஜுபுர் ரஹ்மான்
அதிகரித்த வரி விதிப்பே சுங்கத்தின் இலாபம் டிரிலியன் கணக்கில் அதிகரித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த வருமானம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியால் கிடைக்கப் பெற்றதில்லை என்றும், இவை பெரும் சாதனைகளாக ஊடக மாநாடுகளில் தெரிவிக்க வேண்டிய காரணங்களல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்துரையாற்றிய அவர் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிகரித்த வரிகள் இறக்குமதியாளர்களால் பாவனையாளர்களுக்கு செல்கிறது. அதனாலே பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. எனவும் அவர் கூறியுள்ளார்.
மக்களின் வாழ்க்கைச் செலவு
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இதனால் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு சாதாரண மற்றும் மத்தியதர மக்கள் பயன்படுத்திய படி வாகனம் 25 இலட்சத்துக்கு இருந்தது.
இன்று அதன் விலை 75 இலட்சமாகும்.அதேபோல் வெகனார் 95 இலட்சம் ஷ்பேசியா ஒரு கோடி , எல்டோ 71 இலட்சம், விட்ஷ் காரை 12 இலட்சத்துக்கு கொடுப்பதாக ஒரு அமைச்சர் கூறினார்.
அதனாலே ஜப்பான் இப்போது அந்த வாகனத்தை உற்பத்தி செய்வதில்லை. இப்போது யாரிஷ் தான் இறக்குமதி செய்யப்படுகிறது.
அதன் விலை ஒரு கோடி பத்து இலட்சம் ரூபா. இவ்வாறு வாகனங்களுக்கு 200-600 வீதம் வரி அறவிடப்படுகிறது.
இவ்வாறான நிலையில் சாதாரண விலைக்கு வாகனம் எவ்வாறு கொடுப்பது. மேலும் இறக்குமதி செய்யப்படும் அரிசி ஒரு கிலோவுக்கு 40 வீதமும்,உப்பு ஒரு கிலோவுக்கு 65 வீதம் மேலும் மாவுக்கு இன்றும் 46 வீதம் அறிவிடப்படுகிறது” என கூறியுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam
