இலங்கைக்கான கனடா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக், இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் இசபெல்லா மார்ட்டின் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (05.05.2026) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இதன்போது, மாகாணத்தில் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், மாகாணத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

மற்றும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், மற்றும் மாகாணத்தின் தற்போதைய நிலைமை ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஒத்துழைப்பு
யுத்தத்திற்கு பின்னரான மீள்கட்டுமானம், நீண்டகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு மாகாணம் என்ற ரீதியில், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பை மீளக் கட்டியெழுப்புவதில் உள்ள சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை முழுமையாக மீளக் கட்டியெழுப்பும் பணிகளில், பிரித்தானிய அரசாங்கம் ஒரு சிறந்த பங்காளியாகத் தனது ஒத்துழைப்புகளை வழங்கும் என இதன்போது உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் உறுதி அளித்தார்.

குறிப்பாக, கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களில் இணைந்து செயற்படத் தயார் என்பதையும், கிழக்கு மாகாணத்தின் மீட்சி மற்றும் வளர்ச்சிப் பாதையில் எமது ஒத்துழைப்பு என்றும் இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் காத்திரமான சந்திப்பினை நினைவுகூரும் வகையில், ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
மேலதிக தகவல்-கியாஸ் ஷாபி






சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
ஸ்ருதி வீட்டில் விஜயாவிற்கு ஏற்பட்ட அவமானம், கைவிறித்த பார்வதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam