உயிருக்கு ஆபத்தான நிலையில் சுரேஷ் சாலே! பேச்சுத்திறனை இழக்கும் அபாயம்..
முன்னாள் புலனாய்வுத் துறைத் அதிகாரி சுரேஷ் சாலேவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகப்பட்டு பெப்ரவரி மாதமளவில் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக அவர் உணவைத் தவிர்த்து வந்ததால் உடல்நிலையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதனால் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த நிலையில், அவரை பார்க்க சென்ற சுரேஷ் சாலேவின மனைவி பல கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மேலும் 8 நாட்களாக ஒரு துளி நீர் கூட அருந்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உணவு உட்கொள்ளாமல் இருப்பதன் காரணமாக அவரது உடல் பலவீனமடைந்துள்ளதாகவும், பேச்சுத்திறனை இழக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...