இலங்கையை உலுக்கிய நீர்கொழும்பு சிறை மோதல் விவகாரம் : 2 மணி நேரம் சாட்சியம் அளித்த சிறை அதிகாரி
நீர்கொழும்பு சிறைச்சாலையின் பிரதம சிறை அதிகாரி விக்கிரம ஜயந்த குமார, நேற்று (30) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, 10 அதிகாரிகள் மற்றும் 22 கைதிகள் கொல்லப்பட்ட கொடூரமான சிறை மோதல் தொடர்பாக இரண்டு மணி நேரம் சாட்சியம் அளித்துள்ளார்.
நீதிபதி ஷிலானி பெரேரா முன்னிலையில், பிற்பகல் 1.00 மணி தொடங்கி 3.00 மணி வரை சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேர்வின் சில்வா தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்! சிக்கப்போகும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்
தற்போது சிகிச்சை பெற்றுவரும் நபர்கள்
விசாரணையைத் தொடர்ந்து, அந்த ஆதாரங்களில் தேசியப் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமான தகவல்கள் அடங்கியுள்ளதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

அந்த சாட்சியத்தை எந்த ஊடகத்திலும் வெளியிடக் கூடாது என்றும் தேசியப் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல்களைத் தவிர்ப்பதற்காக அதனைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
விசாரணையின் போது, சம்பவம் நடந்த சமயத்தில் வெலிக்கடையிலிருந்து நீர்கொழும்பு சிறைக்குப் பணியமர்த்தப்பட்டிருந்த 89 சிறைக் காவல் அதிகாரிகள் தொடர்பான விரிவான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
கொழும்பு தேசிய மருத்துவமனை மற்றும் நீர்கொழும்பு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் நபர்கள் குறித்த அறிக்கைகளையும் சிறை அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 23 மணி நேரம் முன்
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri