கொழும்பில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் - கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆரம்பகட்ட விசாரணை
உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனிப்பட்ட தகராறு ஒன்று முற்றியதன் காரணமாக இருவரால் இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பழைய தகராறு
இதேவேளை, யக்கலமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகெட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

யக்கலமுல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யக்கலமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பழைய தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி, கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளது.
27 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.