எயார்பஸ் நிறுவன மின்னஞ்சலால் ஆபத்தில் நாமல் ராஜபக்ச! முக்கிய பல தகவல்கள் கசிவு
எயார்பஸ் ரக வானூர்தி கொடுக்கல் வாங்கலில் 100 மில்லியன் டொலர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இது ஒரு அரசியல் பழிவாங்கல் என்றும் கூற முனைந்தாலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் 2013 மார்ச் 23 ஆம் திகதியிட்ட மின்னஞ்சல் (Email) ஒன்றின் மூலம் பல கதைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான நாமல் ராஜபக்ச விமானங்களை கொள்வனவு செய்யும் யோசனையை ஜனாதிபதி மூலமாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து விடயத்தை முடித்து தருவதாக மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அது தொடர்பில் எயார்பஸ் (Airbus) நிறுவனம் அனைத்து மின்னஞ்சல்களையும் வழங்கியுள்ளது. எயார்பஸ் கொள்வனவு தொடர்பான வேலையை நான் தந்தைக்குச் சொல்லி செய்து தருகிறேன் தந்தை மூலமாக அல்லது ஜனாதிபதி மூலமாக இதற்குத் தேவையான அமைச்சரவை அனுதியை பெற்று தருவதாக கூறியுள்ளார்.
நாமலின் பங்களிப்பு
இதற்கு இணையாக 2013 மார்ச் 27 ஆம் திகதி அன்றைய சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன இக்கொள்வனவுக்கான அனுமதியைக் கோரி அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பpத்துள்ளார்.
அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் ஏப்ரல் 13 ஆம் திகதி அன்றைய நிதியமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ச அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது. என்னவென்றால் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுயாதீன பணிப்பாளர் சபையைக் கொண்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு அமைச்சரவை அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளார்.
அதேபோல் இலங்கைக்கு வந்த எயார்பஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளை நாமல் ராஜபக்ச சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும் இந்த பாரிய அளவிலான விமானக் கொள்வனவின் போது விமான ஓட்டும் பயிற்சி மையம் (Pilot Training Centre) ஒன்றும் பெருந்தொகை செலவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் விமான ஓட்டும் பயிற்சி
அந்தப் பயிற்சி மையத்தை தனது சொந்த தேர்தல் தொகுதியான ஹம்பாந்தோட்டையில் நிறுவுமாறு எயார்பஸ் நிறுவன பிரதிநிதிகளிடம் நாமல் ராஜபக்ச கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின்னஞ்சல் சான்றுகள் மூலம் இத்தகவல்கள் வெளிவந்துள்ளதாகவே லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தற்போது நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. நிமல் பெரேரா அளித்துள்ள வாக்குமூலம் தனக்கு எயார்பஸ் நிறுவனத்துடனோ அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடனோ எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை.

ஆனாலும் நாமல் ராஜபக்ச வெளிநாட்டு ஆலோசனைச் சேவை ஒன்றின் மூலம் பணம் கிடைக்கவுள்ளதாகவும் அப்பணத்தை வைப்பு செய்வதற்கு வெளிநாட்டு கணக்கு ஒன்றைத் தருமாறும் கோரியுள்ளார்.
தனக்கு வெளிநாட்டு ஆலோசனை சேவை மூலம் பணம் வரவுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பத்திலேயே நிமல் பெரேரா தனக்குச் சொந்தமான 'SABREVISION' என்ற நிறுவனத்தின் கணக்கு இலக்கத்தை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கணக்கிற்கு 'Biz Solutions' எனும் நிறுவனம் மூலம் அதாவது அப்போதைய கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜயநாயக்க பணிப்பாளராக இருந்த புரூணையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் இருந்து 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 8 இலட்சம் அமெரிக்க டொலர் பணம் நிமல் பெரேராவின் வெளிநாட்டு கணக்கிற்கு வைப்பு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் அந்த பணத்தை இலங்கையில் 100 மில்லியன் ரூபாவை (10 கோடி) நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO..