கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய மர்ம பொதி - தப்பியோடிய பயணி
கட்டுநாயக்க விமான நிலையத்தின் 6 ஆம் இலக்கப் பொதி பகுதியில் அருகில் மர்மமான முறையில் கைவிடப்பட்டிருந்த பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அந்த பொதிக்குள் பெருமளவு குஷ் ரக போதைப்பொருள் விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இரண்டு பொதிகளுக்குள் காற்றுப்புகாதவாறு 60 பொட்டலங்களாக பொதியிடப்பட்டிருந்தது.
தப்பியோடிய பயணி
இந்தப் போதைப்பொருள், நேற்று தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து வருகை தந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL-405 விமானத்தில் வந்த பயணி ஒருவரால் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

விமான நிலையத்திற்குள் வைத்து சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தின் காரணமாகவே குறித்த பயணி இந்தப் போதைப்பொருளைக் கைவிட்டுத் தப்பியோடியிருக்கலாம் எனப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
குறித்த பொதிகளைக் கொண்டுவந்த விமானப் பயணி யார் என்பதைக் கண்டறிவதற்காக தற்போது விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட குஷ் போதைப்பொருள் தொகுதி இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கையளிக்கப்படவுள்ளது.