நாட்டில் அடுத்த 36 மணிநேரத்திற்கு 50 மி.மீ.க்கும் அதிக மழை - பலத்த காற்று எச்சரிக்கை
நாட்டில் குறிப்பிட்ட இடங்களில் அடுத்த 36 மணித்தியாலங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு இன்று(31.07.2026) 4 மணியளவில் வெளியாகியுள்ளது.
இதற்கமைய, மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
கனமழைக்கு வாய்ப்பு
சில பகுதிகளில் 100 மி.மீக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மாத்தளை, அனுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றாலும், தீவின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேர்வின் சில்வா தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்! சிக்கப்போகும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri