பொருளாதாரத்தை பாதிக்கும் மதுபான உற்பத்தி - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மதுபான உற்பத்தியில் அரிசி மற்றும் சீனியை முதன்மை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துவதற்கு மதுவரி ஆணையாளர் நாயகம் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் ஒப்புதல் அளிப்பதைத் தடுக்கும் உத்தரவு கோரும் ஒரு நீதிப்பேராணை மனுவின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று(31.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அக்டோபர் 2ஆம் திகதியிட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுபான உற்பத்தி
ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்காகவே அக்டோபர் 2 ஆம் திகதியன்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதியரசர்கள் ஆர். குருசிங்க மற்றும் ஏ. பிரேம சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மதுபான உற்பத்தி நிறுவனங்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், மனு தொடர்பான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய ஒரு திகதியை வழங்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.
தேசிய பொருளாதாரத்தில் வீழ்ச்சி
உரிமம் பெற்ற மதுபான விற்பனையாளர்கள் குழுவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மதுவரி ஆணையாளர் நாயகம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள், இலங்கை தர நிர்ணய நிறுவனம், சட்டத்துறைத் தலைவர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அரிசி உற்பத்திக்கு அரசாங்கம் பொது நிதியிலிருந்து கணிசமான மானியங்களை வழங்கி வருகிறது.
இந்தநிலையில், மதுபான உற்பத்தி போன்ற வணிகத் தொழில்களுக்கு அரிசியைத் திசைதிருப்புவது தேசியப் பொருளாதாரத்தில் கடுமையான பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கான நாட்டின் முயற்சிகளைப் பலவீனப்படுத்தக்கூடும் என்றும் மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.
இதற்கமைய, மதுபான உற்பத்தியில் அரிசி மற்றும் சீனியை முதன்மை மூலப்பொருட்களாகப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிப்பதிலிருந்து, மதுவரி ஆணையர் நாயகம் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களைத் தடுக்கும் உத்தரவை மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
மேர்வின் சில்வா தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்! சிக்கப்போகும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்தது தன் குழந்தை என ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்... மகனுடன் வெளியிட்ட போட்டோ Cineulagam