உயிர்த்த ஞாயிறன்று பாதுகாப்பை பலப்படுத்தாத இரு கட்டளை அதிகாரிகள்! குற்றப்புலனாய்வு திணைக்களம் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை...

CID - Sri Lanka Police Easter Attack Sri Lanka Attorney General of Sri Lanka
By Kanthan Aug 15, 2026 09:22 AM GMT
Report

 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 2 முக்கிய குற்றவாளிகள் மீது இன்னும் எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் குற்றப்புலனாய்வுத் துறையிடம் (CID) உள்ளன.

பரிந்துரைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு மூன்றாவது முறையாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து நடவடிக்கை எடுக்குமாறு CID க்கு நேரடி அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளன.

புறக்கணிக்கப்பட்ட எச்சரிக்கை

இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் பதிநாயக்க ஆகியோர் இத்தாக்குதலைத் திட்டமிட்டதாகக் கண்டுபிடிக்கவில்லை என்றது.

ஆனால், அதைவிடவும் பாரதூரமான ஒரு விடயத்தை கண்டுபிடித்துள்ளது. 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி அதிகாலைக்கு முன்னர் கொழும்பின் பாதுகாப்பு கட்டமைப்பின் முக்கிய புள்ளியான கட்டளையிடும் பதவிகளை வகித்த இவர்கள் இருவரும், தாக்குதலை தடுத்திருக்கக்கூடிய கட்டமைப்பு சார்ந்த புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும் செயல்பாடற்று இருந்துள்ளனர்.

பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர்! பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர்! பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

அக்காலத்தில் கொழும்பு - வடக்கு பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தென்னகோனின் நடத்தை குறித்து ஆணைக்குழு அறிக்கையில், கட்டளைச் சங்கிலி எவ்வாறு செயலிழந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க என்பவரால் விரிவான புலனாய்வுத் தகவல்கள் வழங்கப்பட்டு தெளிவான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

உடல் பரிசோதனைகள், வாகனச் சோதனைகள், வாகன நிறுத்துமிடக் கட்டுப்பாடுகள் மற்றும் தேவாலயங்களைச் சுற்றி சாதாரண உடையில் பொலிஸாரைப் பாதுகாப்பில் ஈடுபடுத்துதல் ஆகியவை அந்த உத்தரவுகளில் அடங்கும்.

உத்தரவுகளை செயல்படுத்திய அதிகாரி

இவற்றில் எதுவுமே களமட்டத்தை வந்தடையவில்லை. தென்னகோன் தனது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இந்த உத்தரவுகளை அனுப்பவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் அவரது மேசை கோப்பிலேயே பார்வையிடாமல் இருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பொலிஸ் உயர் அதிகாரிகள் நாடு முழுவதையும் விழிப்புடன் வைத்திருந்த நேரத்தில், தென்னகோனின் உத்தியோகபூர்வ தொலைபேசி துண்டிக்கப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறன்று பாதுகாப்பை பலப்படுத்தாத இரு கட்டளை அதிகாரிகள்! குற்றப்புலனாய்வு திணைக்களம் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை... | Easter Attack In Sri Lanka Deshabandu Tennakoon

அவர் தனது குடும்பத்தினருடன் கிழக்குக் கடற்கரை ஓய்வு விடுதி ஒன்றில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. ஒரு நேரடி தேசிய பாதுகாப்பு நெருக்கடியின் போது ஒரு கட்டளை அதிகாரி தொடர்பில் இல்லாமல் இருப்பது, விசாரணையாளர்கள் சுட்டிக்காட்டியபடி, முன்னெப்போதும் இல்லாத ஒரு நிலைமையாகும்.

மேலும் அப்போதைய கொழும்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த பதிநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டும் பாரதூரமானதே.தாக்குதலுக்கு முன்னர் சில மணிநேரங்களில் ஏப்ரல் 20 ஆம் திகதி இரவு அவருக்கும் தெளிவான எச்சரிக்கைகள் கிடைத்திருந்தும் அவரும் அலட்சியப் போக்கிலே இருந்துள்ளார்.

அப்போது கொழும்பு - தெற்கு பகுதிக்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்கிரமசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் பாதுகாப்புத் திட்டத்தை அப்படியே செயல்படுத்தியிருந்தார்.

அதிகாரிகளைப் பணியில் அமர்த்துதல், தெஹிவளை உட்பட தனது அதிகாரப் எல்லைக்குட்பட்ட பகுதி முழுவதும் இலக்கு வைக்கப்பட்ட சோதனைகளை நடத்துதல் மூலம் அவரது பிரிவில் அச்சுறுத்தல்கள் கட்டுப்படுத்தப்பட்டன.   

ஆணைக்குழுவின் பரிந்துரைகள்

தாக்குதலினால் ஏற்பட்ட அசம்பாவிதங்களைத் தடுத்திருக்க முடியும் என்பதற்கு ஆணைக்குழுவிற்கு கிடைத்த தெளிவான சான்று இதுவாகும்.

தேசபந்து தென்னகோன் - புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் செயல்படத் தவறியமை, பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தத் தவறியமை, அல்லது அதிகாரிகளைப் பணியில் அமர்த்தத் தவறியமை - முறையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும், குற்றவியல் அலட்சியம் குறித்து வழக்குத் தொடுப்பதற்கான விசாரணையை நடத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லலித் பதிநாயக்கவுக்கும் குறித்த பரிந்துரைகளையே விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று பாதுகாப்பை பலப்படுத்தாத இரு கட்டளை அதிகாரிகள்! குற்றப்புலனாய்வு திணைக்களம் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை... | Easter Attack In Sri Lanka Deshabandu Tennakoon

சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள ஆதாரங்களின்படி, இரு அதிகாரிகளுக்கும் எதிராக விசாரணைகளை தொடங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தின் இரண்டு வெவ்வேறு நிர்வாகங்களின் கீழ் முறையான அறிவுறுத்தல்கள் CIDக்கு இரண்டு முறை அனுப்பப்பட்டுள்ளன.

இரண்டு முறையும் கோப்பு முன்னோக்கி நகரவில்லை. முன்னாள் CID பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க - தென்னகோன் மற்றும் பதிநாயக்க ஆகிய இருவருக்கும் நெருக்கமானவர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவரது மேற்பார்வை காலத்தில் விசாரணைகளை தாமதப்படுத்துவதில் அவரது பங்கும் இருந்தது CID ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

பிடிவாதம் பிடிக்கும் அநுர அரசாங்கம்.. நாமல் விடுத்த பகிரங்க சவால்!

பிடிவாதம் பிடிக்கும் அநுர அரசாங்கம்.. நாமல் விடுத்த பகிரங்க சவால்!

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US