காவி உடையை காப்பாற்ற போராடிய ஞானசார தேரர்...! இறுதியில் மின் விசிறியில் தொங்கிய ஆடை - மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை
சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைக்கு சென்ற பின்னர் காவி உடையை காப்பாற்ற அதிகாரிகளுடன் இரண்டு மணிநேரம் போராடியதாகவும், இறுதியில் தான் கழற்றி வீசிய காவி உடை சிறைச்சாலை மேற்கூரையின் மின் விசிறியில் தொங்கியதாகவும் ஞானசார தேரர் கூறியதாக சட்டத்தரணி சூலா அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு இரத்து செய்யப்பட்டு, நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை சந்திப்பதற்காக தான் மெகசின் சிறைச்சாலைக்கு சென்றபோது அவர் இதனை கூறியதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
மீண்டும் காவி உடை
இதற்கு முன்னர் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்றிருந்தபோதிலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறைக்குள்ளோ அல்லது வெளியிலோ தனது காவி உடையைக் கழற்றவில்லை என்று தேரர் கூறியதாக தெரிவித்துள்ளார்.
பௌத்தத்திற்கு எதிரான தற்போதைய அரசாங்கத்திற்கு தனது காவி உடையை கழற்ற வேண்டிய பலத்த தேவை இருந்தபோதிலும், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சிறைச்சாலை அதிகாரிகளுடன் காவி உடையைப் பாதுகாப்பதற்காக போராடியதாகவும், இறுதியில் தான் கழற்றி வீசிய காவி உடை சிறைச்சாலை மேற்கூரையின் மின் விசிறி ஒன்றில் தொங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தனது காவி உடை கழற்றப்படும் விதம் யாரோ ஒருவரால் தொலைபேசியூடாக பார்க்கப்பட்டதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.
உபசம்பதா பெற்ற பிக்குவான தான் மீண்டும் காவி உடையை அணிவதாக இருந்தால், அது சடங்கு ரீதியாகவும் வழிமுறைகளுக்கு இணங்கவும் தனது நிக்காயவினால் செய்யப்பட வேண்டும் என்றும், அவ்வாறில்லாமல் யாரோ ஒருவர் மூலம் தான் மீண்டும் காவி உடையை அணியப் போவதில்லை என்றும் கலபொடஅத்தே ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரணில் - மகிந்த குடும்பத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள்! தண்டனைக்காகப் பல பிறவிகள்
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri