கஸ்ஸப தேரர் தொடர்பில் பரவும் காணொளிகள் : முக்கிய அறிக்கையை வெளியிட்ட பொலிஸார்
கொழும்பு விஹார மஹா தேவி பூங்காவில் சனிக்கிழமை (ஒக்டோபர் 17) நடைபெற்ற போராட்டத்தின் போது, பலாங்கொட கஸ்ஸப தேரர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை பொலிஸார் முற்றாக மறுத்துள்ளனர்.
பொலிஸாருடன் ஏற்பட்ட முரண்பாட்டின் போது, தேரர் கொங்கிரீட் படியில் வழுக்கி வீழ்ந்ததாக பொலிஸார் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொய் உரைகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
விஹாரமஹாதேவி பூங்காவிலுள்ள புத்தர் சிலைக்கு அருகில் தற்காலிக கூடாரம் அமைப்பதற்கும் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கும் சட்டப்படி அனுமதி இல்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதன்போது, கஸ்ஸப தேரர் உட்பட சிலர் பொலிஸாரை முன்னோக்கி தள்ளி நகர முயன்ற போது, தேரர் படியில் வழுக்கி கீழே விழுந்துள்ளார்.
சம்பவத்தை அடுத்து அவர் 'சுவசரிய' அவசர வாகனம் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், மேலதிக சிகிச்சைகள் தேவையில்லை எனத் தெரிவித்து, தேரர் தனது சுயவிருப்பத்தின் பேரில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தாக்குதல் தொடர்பான காணொளிகள் மற்றும் தகவல்கள் பொய்யானவை என தெரிவித்துள்ள பொலிஸார், பொதுமக்கள் அமைதியைக் குலைக்கும் வகையில் பொய் உரைகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
ரணில் - மகிந்த குடும்பத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள்! தண்டனைக்காகப் பல பிறவிகள்