பிக்குகளுக்கு கைகொடுத்த பள்ளிவாசல்! அநுரவிற்கு சென்ற அவசர கோரிக்கை
கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் எதிர்ப்பில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எனினும், பொலிஸார் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும், முரண்பாட்டின் போது வணக்கத்திற்குரிய பலங்கொட கஸ்ஸப தேரர் தவறி வீழ்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

இந்த நிலையில், பிக்குகளுக்கான தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டதாகவும், சுகாதார வசதிகள் தடுக்கப்பட்டதாகவும் சஜித் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிக்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ள அவர், எதிர்ப்பில் ஈடுபட்ட பிக்குகளுக்கு சுகாதார வசதிகளை வழங்கிய தவடகஹா பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்ததுடன், அது மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் - மகிந்த குடும்பத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவங்கள்! தண்டனைக்காகப் பல பிறவிகள்
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan