ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் தப்பிக்க இடமளியோம்: சஜித் திட்டவட்டம்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் இரகசிய நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது, அதனை மூடி மறைக்க சில தரப்பினர் முயற்சிக்கின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு 4 வருடங்கள் கடந்தும் இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இரகசிய நிகழ்ச்சி நிரல்
அவர் மேலும் கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு குறிப்பிட்ட தகவலையும் வெளிக்கொணர முடியாது போயுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் இரகசிய நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது.
அதனை மூடிமறைக்க சில தரப்பினர் முயற்சிக்கின்றனர். இதனால் குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்கவில்லை.
பல்வேறு தரப்பினரின் தலையீடு
இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு பல்வேறு தரப்பினரின் தலையீடு காணப்படுகின்றது.
ஆனால், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன், சுயாதீன விசாரணையின் மூலம், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் ஈடுபட்ட தரப்பினர் தகுதி அந்தஸ்து பாராமல் தண்டிக்கப்படுவார்கள்.
சுயாதீன தேசிய மற்றும் சர்வதேச விசாரணையின் பிரகாரம் இந்த நடவடிக்கையில்
சம்பந்தப்பட்ட எவரையும் தப்பிக்க இடமளிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




