பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு: சிலுவையை சுமந்து போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை கலைஞர் (Video)
'ATA ஐ சுருட்டிக் கொள் PTA ஐ இரத்துச் செய்' என்ற தொனிப்பொருளில் 'மக்கள் போராட்டம் இயக்கம்' என்ற ஒரு இயக்கத்தினால் கொழும்பு - பிரதான தொடருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (21.04.2023) இ்டம்பெற்ற இப்போராட்டத்தில் பல தரப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் இந்த போராட்டத்தின்போது, இலங்கை திரைத்துறை கலைஞரான ஜெகான் அப்புஹாமி சிலுவையை சுமந்தவாறு, தரையில் விழுந்து கிடப்பதைப்பதை போன்று தனது எதிர்பபினை வெளிப்படுத்தியுள்ளார்.
போராட்டக்காரர்கள், நாசக்கார ஐஎம்எப் குற்றங்களை எதிர்ப்பது பயங்கரவாதமா என்ற கோஷத்துடன், ராஜபக்ச அரசாங்கத்தின் அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது பொலிஸ் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










