குண்டு தாக்குதல் காரணமாகவே இலங்கை அதாள பாதாளத்துக்கு சென்றுள்ளது: போதகர் ரொசான் மகேசன் (photos)
மிலேச்சத்தனமான குண்டு தாக்குதல் காரணமாகவே இன்று இலங்கை அதாள பாதாளத்துக்கு சென்றுள்ளதாக சீயோன் தேவாலய போதகர் ரொசான் மகேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - சீயோன் தேவாயலத்தில் இந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் காரணமாக சிறுவர்கள் 14 பேர் உட்பட 31 பேர் கொல்லப்பட்டதுடன் 85 பேருக்கு மேல் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை நினைவுகூரும் வகையிலான நிகழ்வு இன்றைய தினம் (21.04.2023) மட்டக்களப்பில் மன்றேசா வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சியோன் தேவாலயத்தில் நடைபெற்றுள்ளது.
வழிபாடுகள்
சீயோன் தேவாலய பிரதம போதகர் ரொஷான் தலைமையில் இந்த வழிபாடுகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், இன்று நாட்டில் பொருளாதார சுமை மற்றும் வாழ்வாதார சுமை நாடு ஸ்தித்திரத்தன்மையற்ற
நிலை இவை அனைத்தையும் ஏப்ரல் 21 அன்று நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான குண்டு
தாக்குதலின் பிரதிபலனாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
அத்துடன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்றைய தினம் சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு படுகொலை நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதற்கமைய இன்று நான்கு வருடங்கள் கடந்து இருந்தாலும் எங்கள் வேதாகமத்தில் சொல்வது போன்று நாங்கள் அவர்களை மன்னித்து விட்டோம்.
ஆனாலும் அந்த சின்னம் சிறார்களின் உயிரிழப்பு இன்றுவரை எங்களது நெஞ்சங்களில் மாறாத வடுவாகத்தான் இருக்கின்றது.
இந்த தாக்குதலில் உயிரிழந்த அனைவரினதும் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.











