நெதர்லாந்து Roblox மீது அதிகாரப்பூர்வ விசாரணை ஆரம்பம்
நெதர்லாந்து நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பு, 'ரோப்லாக்ஸ்' (Roblox) மீது அதிகாரப்பூர்வ விசாரணையை ஆரம்பித்தது.
சிறுவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் ரீதியான காட்சிகள் இடம்பெறுவதாக நெதர்லாந்து நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பு (ACM) ஒன்லைன் கேமிங் தளமான 'ரோப்லாக்ஸ்' (Roblox) மீது அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சிறுவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் ரீதியான காட்சிகள் இந்தத் தளத்தில் இடம்பெறுவதாகவும், அவர்களைப் பாதுகாக்க இந்த நிறுவனம் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் எழுந்த முறைப்பாடுகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்
குறிப்பாக, வயது குறைந்த பயனர்கள் இத்தளத்தில் உள்ள 'தீய எண்ணம்' கொண்ட நபர்களால் குறிவைக்கப்படுவது மற்றும் குழந்தைகளைத் திட்டமிட்டுப் பொருட்களை வாங்கத் தூண்டும் நுணுக்கங்களைப் பயன்படுத்துவது போன்றவை குறித்து இந்த விசாரணை தீவிரமாக நடைபெறும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 'டிஜிட்டல் சேவை சட்டத்தின்' (DSA) கீழ், ஒரு வருட காலம் நடைபெறவுள்ள இந்த விசாரணையின் இறுதியில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், ரோப்லாக்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே 2024-ஆம் ஆண்டில் குழந்தைகளைச் சுரண்டியதற்காக 'எபிக் கேம்ஸ்' நிறுவனத்திற்கு இதேபோன்ற ஒரு அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்துப் பதிலளித்துள்ள ரோப்லாக்ஸ் நிறுவனம், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய முகம் கண்டறியும் தொழில்நுட்பம் (Facial Recognition) போன்ற பாதுகாப்பு அம்சங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam