தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம்: துமிந்தவுக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள துமிந்த திஸாநாயக்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த பெண்ணிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ரி - 56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கொழும்பு - பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த துமிந்த திஸாநாயக்க, சுகயீனம் காரணமாக மே மாதம் 25ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மே மாதம் 28ஆம் திகதி மீண்டும் மகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri