மக்களின் முன் தோன்றிய அலி கமேனி! அமெரிக்காவிற்கு பகிரங்க எச்சரிக்கை
அமெரிக்கா கூறுவதைப் போல நாம் ஒருபோதும் சரணடைய மாட்டோம் என ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பின்னர் முதன்முறையாக இன்று(26) மக்கள் முன் வந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பதற்றமனான சூழ்நிலையின் போது ஈரான் மக்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரிய விலை
மேலும், ஈரான் ஒரு போதும் சரணடையாது எனவும் எமது நாடு முதுகெலும்பு உள்ள நாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் போன்ற ஒரு சிறந்த தேசத்திற்கு, சரணடைதல் தொடர்பில் குறிப்பிடுவதே ஒரு அவமானம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஈரான் பிராந்தியத்தில் மேலும் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டால் அமெரிக்கத் தளங்கள் அதற்கு பாரிய விலையை கொடுக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan