யாழ். அரியாலையில் சித்திரவதை முகாம்! செம்மணியின் சாட்சியமாக மாற தயாராகும் மக்கள்
1995 - 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்.குடாநாடு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வேளையில் விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்களை இராணுவ முகாம்களிலே அடித்து துன்புறுத்தினார்கள் என்பதற்கு சாட்சியமாக பல உயிருள்ள ஆதாரங்கள் உள்ளன.
கிருசாந்தி எனும் மாணவியின் படுகொலை வழக்கின் திருப்பம் செம்மணியில் பல மனித உடல்களை மீட்க ஒரு ஆரம்ப புள்ளியாக மாறியது.
குறித்த மாணவியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினருக்கு மரணதண்டனை விதிப்பதற்கு முன்னர் நீங்கள் ஏதாவது கூறப்போகின்றீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில், செம்மணி மனிதப் புதைகுழியை அடையாளப் படுத்தியது.
சுமார் 400 தொடக்கம் 600 வரையான யுவதிகள் கொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டுள்ளதாக அந்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்தோடு, 20 இராணுவ அதிகாரிகள் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டார்கள்.
இப்படி அடையாளப்படுத்தப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் இன்று பூதாகரமாக வெடித்திருக்கின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இந்த சிறப்பு தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 15 மணி நேரம் முன்

இந்தியாவின் புதிய ஏவுகணை சோதனை., இந்திய பெருங்கடலில் 2,530 கிமீ ஆபத்தான பகுதியாக அறிவிப்பு News Lankasri
