அர்ச்சுனா எம்.பியின் பதவி தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்மானம்
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பதவி தொடர்பான வழக்கு ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்றையதினம்(26.06.2025) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இதன்போதே, வழக்கை ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியல்வாதிகளின் இழிவான செயற்பாடுகள்
இதேவேளை, யாழ். செம்மணியில் இடம்பெற்ற அணையா விளக்கு இறுதி நாள் போராட்டத்தில் கலந்து கொண்ட அர்ச்சுனா, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி நிம்மதியாக இருப்பது குறித்து சிந்தித்து வருவதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன், சில தமிழ் அரசியல்வாதிகளின் இழிவான செயற்பாடுகளால் தான் ஒரு அரசியல்வாதியாக இருப்பதை நினைத்து வெட்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 15 மணி நேரம் முன்

இந்தியாவின் புதிய ஏவுகணை சோதனை., இந்திய பெருங்கடலில் 2,530 கிமீ ஆபத்தான பகுதியாக அறிவிப்பு News Lankasri
