ஐரோப்பா செல்ல ஆசைப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய யாழ் இளைஞர்கள்
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
போலி இந்திய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி அபுதாபி செல்ல முயன்ற 2 இலங்கை இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எதிஹாட் எயார்வேஸ்
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 21 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.
அபுதாபிக்குச் செல்லவிருந்த எதிஹாட் எயார்வேஸ் EY-397 விமானத்தில் ஏறுவதற்காக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா சென்று அங்கிருந்து அபுதாபி ஊடாக இத்தாலிக்கு செல்ல முயற்சித்த வேளையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 16 மணி நேரம் முன்

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
