சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்ல வேண்டாம்: இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
சுற்றுலா வீசாவில் வேலைக்காக ஒருபோதும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை இளைஞர்களை ரஷ்ய இராணுவ சேவைக்கு அனுப்பும் முயற்சியில் மனித கடத்தல் கும்பல் ஒன்று செயற்பட்டு வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா வீசா மூலம் ரஷ்ய இராணுவ சேவையில் இணைந்து கொண்டு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய குழுவினரின் உறவினர்கள் அண்மையில் அமைச்சரை சந்தித்து அமைச்சரின் பணிப்புரைக்கமைய முறைப்பாடுகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
ரஷ்ய இராணுவத்தில் அதிக சம்பளத்தில் வேலை
இதற்காக ரஷ்ய இராணுவத்தில் அதிக சம்பளத்தில் வேலை தருவதாக கூறி ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இவர்கள் முதல் பாதுகாப்பு கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பல மாதங்களாக தங்களுக்கு உரிய சம்பளம் கூட வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி எந்தவொரு நபரும் இராணுவ சேவைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படமாட்டார் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்ல வேண்டாம் என எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், தொழில் நிமித்தம் சென்றால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
மனித கடத்தல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தின் கீழ் பணியகத்திற்கு அதிகாரம் இல்லை எனவும், மேலும் அத்தகைய முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரிக்கப்படுகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
