சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்தரகுப்த கைது செய்யப்பட்டுள்ளார்.
தரம் குறைந்த மருந்து பொருட்களை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தரம் குறைந்த மருந்துப் பொருள் இறக்குமதி தொடர்பிலான விசாரணைகளில் வாக்குமூலம் அளித்ததன் பின்னர் ஜனகவை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
[W8VB4 ]
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் இந்த கைதினை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 19 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
