மன்னாரில் உலருணவு பொதிகள் வழங்கிவைத்த சீன தூதுவர்
சீனாவில் உள்ள பௌத்த மக்களின் உதவியுடன் இலங்கையில் வறிய மக்களுக்கு உலருணவு பொதிகள் சீன தூதுவரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இன்றையதினம் (07.11.2023) இடம்பெற்றது.
மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற உதவி திட்டம் வழங்கும் நிகழ்வில் சீனத் தூதுவர் கீ செங்ஹோங் கலந்து கொண்டு மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 450 கடற்தொழில் குடும்பங்களில் முதல் கட்டமாக 50 கடற்தொழில் குடும்பங்களுக்கு உலருணவு பொதிகளை வழங்கி வைத்தார்.
இந்த உதவித் திட்டம் சீனாவின் பௌத்த சங்கம், இலங்கை மற்றும் சீன பௌத்த நட்புறவுச் சங்கம் ஊடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட கடற்தொழில் குடும்பங்கள், தள்ளாடி இராணுவ 541 வது படைப்பிரிவு அதிகாரி, அருட்தந்தையர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam
