தீவுகளில் சிக்கிய ஈழத்தமிழர்கள்! பிரித்தானியாவில் இருந்து சென்ற மொழிபெயர்ப்பாளர் (Video)
இஸ்ரேல் யுத்தத்தில் ஹமாஸின் இராணுவ வியூகங்களை இஸ்ரேலிய உளவுத்துறை அறிந்துள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் விமர்சகர் அருள் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம் இன்றுடன் ஒரு மாதத்தை கடக்கின்றது. அழிவுகளும் மிக வேகமாக அதிகரித்துச் செல்கின்றன.
இது யுத்தம் என்பதைத்தாண்டி, காசா மீதான மிகப்பெரிய மனிதப் பேரவலம் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உள்ளடங்களாக அனைத்து அமைப்புக்களும் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து வருகின்றன.
ஆனாலும் யுத்தத்தினுடைய வீரியம் குறையவில்லை. அப்படியாயின் இதனை மூன்றாம் உலகப் போரின் ஆரம்பப் புள்ளியாக பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தநிலையில், இந்த யுத்தத்தின் அடுத்தக் கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பில் அரசியல் விமர்சகர் அருள் எம்மிடம் மேலும் தெரிவித்ததாவது,