பிலியந்தலையில் 300 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள்! தம்பதி கைது
பிலியந்தலைப் பிரதேசத்தில் முன்னூறு மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளைப் பதுக்கி வைத்திருந்த தம்பதியொன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிலியந்தலை, போகுந்தர பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இரகசியத் தகவலின் பேரில்
அங்குள்ள வீடொன்றில் மேல்மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவு பொலிசார் நடத்திய விசேட சோதனையொன்றின்போது ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனபோது பதினொரு கிலோ ஹெரோயின் மற்றும் ஆறு கிலோ ஐஸ் போதைப் பொருள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தம்பதியொன்று உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan