சுவிட்சர்லாந்தில் 110 டன் உணவு கடத்தல் : சிக்கிய இரு இலங்கையர்கள்
சுவிட்சர்லாந்திற்குள் 110 டன் உணவு சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் அங்குள்ள 8 கடைகளுக்கு விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்
சுவிட்சர்லாந்தில் உணவுப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகள் மற்றும் கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாக இருப்பதால், லாபம் ஈட்டும் நோக்கில் இந்த கடத்தல் முயற்சி நடந்துள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தல் கும்பலுக்கு ஒரு பிரெஞ்சுக்காரர் உட்பட 4பேர் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதில் ஓட்டுநர், சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இரண்டு இலங்கையர்கள் மற்றும் ஒரு பிரெஞ்சுப் பெண் ஆகியோர் தலைமை தாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட பொருட்களின் மதிப்பு, சுங்க வரிகளில் 75,000 பிராங்குகள் மற்றும் மதிப்புக்கூட்டு வரியில் 6,000 பிராங்குகள் என கணிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில், தென் கொரியாவின் புல்டாக் பிராண்ட் நூடுல்ஸ் 5.5 டன்களும் அடங்கும். இந்த நூடுல்ஸ் சமீப ஆண்டுகளில் சமூக ஊடகங்களில் பெரும் பிரபலமடைந்ததோடு, சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.
you may like this video
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam