நீண்ட காலமாக தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் கைது..! 25 வயது இளைஞரிடம் போதை மாத்திரை மீட்பு
நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பல குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில், போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(02.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, சோதனை நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட விவகாரம் : வீண் விமர்சனங்களை கடுமையாக எதிர்க்கும் யாழ். பல்கலை பேராசிரியர்..!
இருவர் கைது
இதன்போது, நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாகியிருந்த இருந்த நபர் ஒருவர், ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
36 வயதுடைய குறித்த சந்தேக நபரை, தமது உயிரை பணயம் வைத்து கைது செய்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்த சென்ற வேளையில், பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த நபர் நீண்ட நாட்களாகியும் கிடைக்காத நிலையில், நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன், நீண்ட காலமாக பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை சூட்சுமமாக விநியோகித்து வந்த மற்றுமொரு 25 வயதுடைய சந்தேக நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இவர்கள் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்திய பௌத்த தேரர்..! வெளிச்சத்திற்கு வந்த தகவல்
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan