வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட விவகாரம் : வீண் விமர்சனங்களை கடுமையாக எதிர்க்கும் யாழ். பல்கலை பேராசிரியர்..!

By Theepan Jun 03, 2026 11:06 AM GMT
Report

  யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், தேவையற்ற மற்றும் விசமப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு கடந்த 31ஆம் திகதி நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தாயகப் பாடலை எடிட் செய்து பதிவிட்ட பாடகருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!

தாயகப் பாடலை எடிட் செய்து பதிவிட்ட பாடகருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!

வெசாக் கூடு உடைக்கப்பட்ட சம்பவம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் கல்வி பயிலும் சகல இன மாணவர்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனுமே தமது கற்கைகைளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒவ்வொருவருடைய இன - மத, சமய - சமூக பண்பாட்டு விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அந்தந்தக் காலப்பகுதிகளில் அவரவர் கலாசார நிகழ்வுகளும் இடம்பெறுவது வழமையாகும்.

வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட விவகாரம் : வீண் விமர்சனங்களை கடுமையாக எதிர்க்கும் யாழ். பல்கலை பேராசிரியர்..! | Jaffna University Vesak Nest Vandalized

அந்த வகையில், கடந்த வார இறுதியில் பௌத்த மாணவர்களால் 30, 31 ஆம் திகதிகளில் வெசாக் நிகழ்வுகளை நடத்துவதற்கு முறையாக அனுமதி கோரப்பட்டிருந்தது. சகல மதங்களுக்கும் சம மரியாதை அளிக்கும் வகையில் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

30 ஆம் திகதி சனிக்கிழமை எந்தவித அசம்பாவிதங்களுமின்றி நிகழ்வுகள் நிறைவு பெற்றிருந்தன. 31 ஆம் திகதி இரவு வரை நிகழ்வுகள் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த பின்னர் 10:50 மணியளவில் முகங்களைத் துணியால் மூடியபடி மதில் வழியாகப் பாய்ந்து உள்நுழைந்த இனந்தெரியாத இரண்டு பேர் பீடத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரத்தை அடித்து சேதப்படுத்துவதை அவதானித்த கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை நோக்கிச் செல்ல அவர்கள் மதில் பாய்ந்து தப்பிச் சென்றனர்.

விசமப் பிரசாரங்கள் தேவையில்லை..

அதன் பின்னர், மீண்டும் நள்ளிரவு 12:50 மணிக்கு மீளவும் மதில் வழியால் குதித்து உள்நுளைந்துள்ளனர். மீண்டும் அதனைக் கண்ணுற்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை விரட்டிச் சென்ற போது அவர்கள் மதிலேறித் தப்பிச் சென்றுவிட்டனர். சம்பவம் தொடர்பில் அந்த நேரத்தில் பீடாதிபதிக்கு அறிவிக்கப்பட்டு உடனடியாகத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பீடத்துக்கு விரைந்து வந்து தகவல்களினைப் பெற்றதோடு மறுநாள் துணைவேந்தரின் அறிவுறுத்தலுக்கமைய பதிவாளரினால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இவ் அநாகரிக செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட விவகாரம் : வீண் விமர்சனங்களை கடுமையாக எதிர்க்கும் யாழ். பல்கலை பேராசிரியர்..! | Jaffna University Vesak Nest Vandalized

பீடத்தில் வழமையான கற்கை நடவடிக்கைகள் ஒற்றுமையாக நடைபெறுகின்றது. இதற்கிடையில் இச் சம்பவத்தின் அடிப்படையில் இன நல்லுறவைப் பாதிக்கும் வகையிலான தேவையற்ற பிரசாரங்களும் செய்திகளும் பரவிய வண்ணமுள்ளன.

அடிப்படையில் பல்கலைக்கழகத்தின் சுமூகமான இயக்கத்தைக் குழப்புபும் வகையிலும் தமிழ் - சிக்களமாணவர்களிடையே காணப்படும் புரிந்துணர்வைக் குழப்பும் வகையில் இந்தச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது .

மாணவர்கள் மிகத் தெளிவாக உள்ளனர். எனவே தேவையற்ற - விசமப் பிரசாரங்களினை மேற்கொள்ள வேண்டாம் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.   

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்திய பௌத்த தேரர்..! வெளிச்சத்திற்கு வந்த தகவல்

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை பாலியல் துர்நடத்தைக்குட்படுத்திய பௌத்த தேரர்..! வெளிச்சத்திற்கு வந்த தகவல்

குவைத் விமான நிலையத்தை இலக்கு வைத்த ஈரான் : முடக்கப்பட்ட விமான சேவைகள்

குவைத் விமான நிலையத்தை இலக்கு வைத்த ஈரான் : முடக்கப்பட்ட விமான சேவைகள்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US