பச்சைக் குத்துதல் தொடர்பிலான விதிகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
முன்மொழியப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தில் பச்சைக் குத்துதல் மற்றும் உடல் அடையாளங்கள் தொடர்பான விதிகள் நீக்கப்படவுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றங்கள் நாடாளுமன்றக் குழுநிலை விவாதத்தின்போது திருத்தங்களாக முன்வைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற அனுமதி
அதன்படி, கடுமையான குற்ற வழக்குகள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு முன் நீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்ற பிரிவும் நீக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட 26 மனுக்கள் மீதான விசாரணையின்போது இந்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நேற்று (09) விசாரணை நடைபெற்றது.
கொழும்பில் ஏற்பட்ட வெள்ளம் சர்ச்சையை ஏற்படுத்திய கொழும்பு மாநகர சபை விவகாரம்.. கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு