அல்லாஹ் மக்களுக்கு முன்பாக உருவாக்கி காட்டியுள்ள விடயம் - சுட்டிக்காட்டிய வைத்தியர் ஷாபி
ஆட்சிக் கதிரையில் இருந்து நீக்கி ஜனாதிபதியாக இருந்த தனி நபரை எந்தவொரு நாடும் பொறுப்பேற்க மாட்டோம் என கூறும் ஒரு கேவலத்தை அல்லாஹ் மக்களுக்கு முன்பாக உருவாக்கி காட்டியிருக்கின்றார் என வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தெரிவித்துள்ளார்.
இலங்கை நீதிக்கான மய்யம் சாய்ந்தமருது பகுதியில் தனியார் மண்டபத்தில் நேற்றைய தினம் (27) ஏற்பாடு செய்திருந்த வைத்தியர் ஷாபியும் கிழக்கு மக்களும் என்ற டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம் குறித்த புத்தக அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
டாக்டர் ஷாபி தொடர்பான நூல்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சிரேஷ்ட ஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய 'டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம்' என்ற நூல் மக்களை சென்றடைய வேண்டும்.
எனக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் உள்ளக் குமுறல்களை பகிர்ந்து கொள்ளவும் நேரடி வாக்குமூலம் வழங்கவும் இன்று இங்கு உரையாற்றுகின்றேன். அதுமாத்திரமன்றி அடைக்கலம் கொடுத்த கிழக்கு மக்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இது தவிர எனக்கு அநீதி நடந்த போது ஆட்சிக் கதிரையில் ஜனாதிபதியாக இருந்த தனி நபரை எந்தவொரு நாடும் பொறுப்பேற்க மாட்டோம் என கூறும் ஒரு கேவலத்தை அல்லாஹ் மக்களுக்கு முன்பாக உருவாக்கி காட்டியிருக்கின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.















தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 20 மணி நேரம் முன்

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
