ஜனாதிபதிக்கு பாரியளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு பாரியளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி உலங்கு வானூர்தியிலும் பயணம் செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
யார் என்ன சொன்னாலும் ஜனாதிபதிக்கு மிகப் பாரிய அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புடன் பயணங்கள்
எனினும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாதுகாப்பு வழங்கப்படுவதனை விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி குறைந்த பாதுகாப்புடன் பயணங்கள் மேற்கொள்ளக் கூடாது என்பதே தமது தனிப்பட்ட நிலைப்பாடு என லால்காந்த தெரிவித்துள்ளார்.
அமைச்சரான தாம் கெப் ரக வாகனத்தில் பயணிப்பதாகவும் மேலதிக செயலாளர்கள் வீ8 ரக வாகனங்களை பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த அதிகாரிகளுக்கு தற்பொழுது வெட்கம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        