தமிழர் பகுதி புத்தர்சிலை விவகாரம்.. கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேர் இன்று நீதிமன்றில்!
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் இன்று (11) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளார்.
விளக்கமறியல்..
மேலும், திருகோணமலை கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜா விகாரையின் அதிபர் வணக்கத்துக்குரிய கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், வணக்கத்துக்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர், வணக்கத்துக்குரிய சுகிதவன்ச திஸ்ஸ தேரர், நந்த தேரர் உள்ளிட்ட 10 பேர் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட உள்ளனர்.

இந்தக் குழுவினர் கடந்த 9 ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைடுத்தப்பட்ட போது, அவர்களை இன்று (11) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
திருகோணமலை நகரின் கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் அங்கீகரிக்கப்படாத குடிசை கட்டப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டதாகக் கூறி கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.