இலஞ்ச ஊழல் ஆணையத்தில் முன்னிலையாகும் கோட்டாபய..கைது செய்யப்படுவாரா!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச விசாரணைக்காக முன்னிலையாக வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள ஒரு வீட்டுத் தொகுதிக்குச் சொந்தமான பல வீடுகளை பல நபர்களுக்கு சட்டவிரோதமாக ஒதுக்கிய விவகாரம் மற்றும் அதனோடு தொடர்புடைய விடயங்கள் குறித்த விசாரணைக்காக கோட்டாபய அழைக்கப்பட்டுள்ளாார்.
குறித்த சம்பவம் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே, விசாரணைக்காக முன்னிலையான பின் அவர் கைது செய்யப்படுவாரா என்னும் கேள்வி பலர் மத்தியில் எழுப்பப்பட்டு வருகின்றது.
இவ்விடயங்கள் குறித்து ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் தமிழ் நிகழ்ச்சி,